ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 31 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 31 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 31 அக்டோபர் 2024 – Daily HoroscopeHappy Diwali இன்றைய ராசிபலன் 31.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 14, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி, துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் இயல்பில் மென்மையை கடைப்பிடிக்கவும். இன்று வெற்றி தேடி வரக்கூடிய நாள். தொழில் ரீதியாக நல்ல நாளாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். வணிகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பாக கவலை ஏற்படும். இன்று உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செல்ல விரும்புவீர்கள். தினசரி தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நிலவையில் உள்ள பணமும் எங்கிருந்தோ வந்து சேரும். மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறது. பணியிடத்தில் சக ஊழியர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சோம்பலை கைவிட்டு கவனமாக செயல்படவும். உங்கள் தொழில் தொடர்பான முயற்சியில் சோம்பலை கைவிடுத்து சுறுசுறுப்பாக செயல்படவும். இன்று புதிய ஒப்பந்தங்கள் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு லாபகரமான சூழ்நிலை உருவாகும். இன்று உங்களை சுற்றியுள்ளவர்களால் சில சிரமத்தை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற மன வருத்தம் ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முயற்சிக்கும் இந்த வேலையும் எளிதில் முடிவடையும். உங்களுக்கு நன்மை அதிகம் நடக்கக்கூடிய நாள். பிள்ளைகளின் சில வேலைகளால் மகிழ்ச்சியும், நன்மையும் அடைவீர்கள். வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் சேர்த்து ஆவணங்களை சரியாக சோதிக்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த சில நாட்களாக நிலவி வந்த சட்டம் தொடர்பான சங்கடங்கள் முடிவுக்கு வரும். இன்று நம்பிக்கையூட்டக்கூடிய செய்திகளை கேட்பீர்கள். வணிகத்தில் திருப்திகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். இன்று எந்த விஷயத்திற்காகவும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பணத்தை முதலீடு செய்யும் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் தரும். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படும். இந்த உலக இன்பங்களை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு திருப்தி தரக்கூடிய நாள். மாலை நேரத்தில் நம்பிக்கையான செய்திகள் வந்து சேரும். குழந்தையின் திருமணம் தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். அதனால் சில வேலைகளை தள்ளி வைக்க வேண்டிய நேரம். இந்த புதிய ஒப்பந்தங்கள் விஷயத்தில் கவனம் தேவை. எதிலும் அவசரப்பட்டு ஈடுபட வேண்டாம். இன்று வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். துணையின் ஆதரவு மன நிறைவைத் தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனைவியின் உடல்நிலை விஷயத்தில் கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. தேவையற்ற சில வீண் செலவுகள் வரும். ஆன்மீகம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. செல்வாக்கு மிக்க நபர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் உண்டு. இன்று பணப் பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் கவனமாக செயல்படவும். தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் வருமானம் குறைவாகவே கிடைக்கும். இன்று உங்களுக்கு மரியாதையும், பரிசுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. பெண் நண்பர்கள் மூலம் திடீர் பண ஆதாயம் பெறுவீர்கள். தந்தையுடன் இருந்த மன வருத்தம் நீங்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். இன்று உங்கள் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களின் விருப்பத்தைப் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு வேலையும் முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வீடு, பணியிடங்களில் முக்கிய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று சில சிறப்பான புதிய வாய்ப்புகள் அமையும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான விஷயங்களை கவனமாக செய்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் குறைவான லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு சில பரிசுகளும், மரியாதைகளும் கிடைக்கும். பெண் நண்பர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை.