ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 29 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 29 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 29.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 12, செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம், கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் ஏற்றுமான சூழல் இருக்கும். உடல் சோர்வு சந்திக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் எதிர்கால திட்டம் குறித்து பெற்றோருடன் விவாதிப்பீர்கள். வியாபாரத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவதில் துணையின் ஆதரவு கிடைக்கும். இன்று மாலை பொழுதில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை குறைபாடு மன வருத்தத்தையும், அலைச்சலையும் அதிகரிக்கும். இன்று முதலீடு செய்வதை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களுடன் உறவில் மனக்கசப்பு நீங்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உறவினர்களுக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். அக்கம் பக்கத்தினருடன் எந்த ஒரு தகராறில் ஈடுபட வேண்டாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அதிக லாபத்தை தேடும் நோக்கத்தில், உங்களின் பல பணிகள் தடைபடுதல் அல்லது தள்ளி போட வாய்ப்பு உள்ளது. உங்களின் மனம் அலைபாயும். பணம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிக பணம் செலவிடுவார்கள். பணியிடத்தில் கடினமான வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்து முடிக்க முயற்சிக்கவும். இன்று சகஊழியர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். இன்று சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. சில செரிமானம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இன்று வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று பணியிடத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று கோபத்தையும், கடினமான வார்த்தைகளின் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இன்று உடல் சோர்வு, அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் கவனமாக செயல்படவும். உங்கள் எதிரிகளை புத்திசாலித்தனமாக சமாளிக்கவும் . அரசியலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய பொறுப்புகள், வெற்றிகள் கிடைக்கும். வீட்டின் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அனைவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனமாகவும் விவேகத்துடனும் நடந்து கொள்ளவும். எந்த வேலையிலும் சிறப்பான வெற்றியை பெறலாம். வேலையில் சக ஊழியர்களின் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று எந்த முடிவை எடுப்பதிலும் கூடுதல் கவனம் தேவை. திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக ஆசிரியர்களின் சிறப்பான ஆதரவை பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பழைய மற்றும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். காதல் வாழ்க்கையில் துணையின் புரிதல் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான திட்டத்தில் முன்னேற்றம் உண்டா
கும்.வேலையில் எதிர்பார்த்த பலன் பெறுவீர்கள். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபடுவீர்கள். இன்று பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து வாக்குவாதம் ஏற்படும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பயணங்கள் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய விஷயங்களை செய்து முடிக்க நினைப்பீர்கள். அது தொடர்பாக கடந்த கால தவறில் இருந்து அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். பண ஆதாயம் பெறுவீர்கள். இன்று தேவையற்ற சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும். நிதிநிலை வலுவாக இருக்கும். பண ஆதாயம் பெறுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பளம் உயர வாய்ப்புள்ளது. எதிரிகளின் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியில் எந்த ஒரு வாக்குறுதியும் யாருக்கும் அளிக்க வேண்டாம். இன்று அத்தியாவசியமான பொருட்களை வாங்கும் விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் லாபம் காண்பீர்கள். குடும்பம் மற்றும் பணி சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் நம்பிக்கையும் லாபமும் அதிகரிக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் மும்முரமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று குடும்ப விவகாரங்களில் மன அழுத்தம் ஏற்படும். பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.