ஜோதிடம்
இன்றைய ராசிபலன் 27 செப்டம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 27 செப்டம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 27.09. 2024, குரோதி வருடம் புரட்டாசி 11 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் பூரம்,உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அனுபவிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் மீது நிலை முன்னேற்றம் அடையும் என்பதால் கவலை குறையும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் விருந்து விழாக்கள் அல்லது சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். புதிய தொழில் தொடங்குதல் அல்லது வேலை செய்வதில் வெற்றி பெறுவீர்கள்.உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் புதுமை எதிர்பார்க்கலாம். பணியிடத்திலிருந்து சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். இன்று சொந்த தொழிலில் சகோதரர்களின் ஆதரவால் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். இன்று பணிச்சுமையால் மன அழுத்தத்தை உணர்வீர்கள். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் உங்களின் புகழ் அதிகரிக்கும். உங்கள் அறிவு மற்றும் அனுபவத்தால் மரியாதை அதிகரிக்கும். இன்று வேலை பல காரணமாக உங்கள் குடும்பத்தினருடன் அல்லது காதல் வாழ்க்கைக்கு நேரம் கொடுக்க முடியாமல் போகும். தடைப்பட்ட வேலையை செய்து முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களின் முக்கிய ஆவணங்கள் அல்லது நகைகள் திருடு போகும் அபாயம் உள்ளது கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். உங்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக சூழல் சாதகமாக இருக்கும். பூர்வீக குடும்ப சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் உடல் நலம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி தொடர்பாக எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். உயர் கல்விக்கான பாதை அமையும். இன்று நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் உறவில் வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பாக புதிய விஷயங்கள் செய்ய முயல்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களின் உதவியால் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். இன்று உங்கள் வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலையை கடைப்பிடிக்கவும். ஆன்மீகம் தொடர்பான விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் உங்களின் புகழ் அதிகரிக்கும். உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. பழைய உடல்நிலை பிரச்சினை தொந்தரவு செய்யும். இன்று பெற்றோரின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெறலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் கூடுதல் கவனம் தேவை. பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இளைஞர்கள் வேலை தேடும் விஷயத்தில் திறனை மேம்படுத்திக் கொள்ளவும். கடந்த கால முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் மதியத்திற்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கை மேம்படுத்தக் கடினமான உழைப்பு தேவைப்படும். இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடும், அவர்களின் கோபத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். வீட்டில் கசப்பான சூழல் இருக்கும். சமூகத்தில் மூத்தவர்களின் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் வருமானம் பெருகும். செலவை கட்டுப்படுத்தவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். பணியிடத்தில் உங்களின் புகழ், மதிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இணக்கமான மனசூழல் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வணிகத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்களின் லாபம் பெருக வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயலில் விளையாட்டாக இருப்பீர்கள். அதனால் எதிர்பார்த்த முடிவு கிடைக்க தாமதம் ஏற்படும். இன்று மற்றவர்களிடம் அன்பாக பழகுவீர்கள். இன்று உங்களின் பேச்சு, கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நீதிமன்ற வழக்குகள் விஷயத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலை அதிகரிக்கும். இன்று உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். உங்கள் உணர்வுகளை, ரகசியங்களை பிறரிடம் வெளிப்படுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்தால் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். இன்று ஏதேனும் ஒரு வழியில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப் உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று பருவ கால நோய் பாதிப்பு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.இன்று பிற்பகலில் பணவரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.