ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 9, 2024, குரோதி வருடம் ஆவணி 24, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த ரேவதி, அஸ்வின்i நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்காது. உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை முடிப்பதில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றியை பெறலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள். தடைப்பட்ட வேலையை முடிக்க முடியும். உங்களின் புகழ் அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். முக்கியமான வேலை முடிக்க பணம் அதிகமாக செலவாகும். குடும்பத்துடன் ஷாப்பிங் சொல்வீர்கள். வெளிநாடு தொடர்பான கல்வி, வேலை விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடக ராசிபலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கவலை அதிகரிக்கும். எந்த வேலையையும் சிரமத்திற்கு பின்னர் முடிக்க முடியும். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிரம்பி இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து தொடர்பான முதலீடுகளில் சாதக பலன்கள் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். நல்ல வரன் தேடி வரும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளை பொறாமைப்படும் அளவில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியை பெறலாம். உறவினர்கள் மூலம் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். வணிகம் அல்லது தொழில் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கு முன் முறையாக சோதிக்கவும். இன்று உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று எந்த வேலையும் சிந்தனையுடன் செயல்படவும். குடும்பத்தில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான தொழில், வியாபாரத்தில் நல்ல செய்தி கிடைக்கும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை விஷயத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற பயத்தை விடுத்து நம்பிக்கையுடன் செயல்படவும். உங்கள் வேலையில் செய்த முதலீடுகள் மூலம் லாபத்தை பெறலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அறிவுத்திறன் அதிகரிக்கும். சிறப்பான ஒப்பந்தங்கள், லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் கோயில், ஆன்மீக நிகழ்ச்சி பங்கேற்பீர்கள். பிறந்தவர்கள திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் விலகும். இன்று எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப தகராறு மன உளைச்சலை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இன்று உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடையும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சற்று சோர்வாக உணர்வீர்கள். இன்று பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். முக்கிய வேலைகளை திட்டமிட்டு செயல்படவும். வணிகம் தொடர்பான முடிவுகளில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை பெறுவது நன்மை தரும்.