ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 2 செப்டம்பர் 2024 – Horoscope Today
இன்றைய ராசிபலன் : 2 செப்டம்பர் 2024 – Horoscope Today
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 2, 2024, குரோதி வருடம் ஆவணி 17, திங்கட் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு, மகரம் ராசியில் உள்ள சேர்ந்த உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். குழந்தைகளின் மீதான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏதேனும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும். உங்கள் காதலில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரக்கூடிய நாள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென பெரிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். வேலை விஷயத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய உறவுகளில் கவனம் தேவை. வேலையில் வளர்ச்சியும், மன நிறைவும் இருக்கும். குழந்தைகள் தொடர்பாக கவலை தீரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உங்களுக்கு புகழும், நற்பெயரும் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக நீங்கள் எடுக்கும் முடிவுகளை வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலை தொடர்பாக எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். தனிப்பட்ட வேலைக்கான பயணம் மகிழ்ச்சியை தரும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் செயல்படுவீர்கள். மாணவர்கள் எந்த ஒரு போட்டியிலும் சிறப்பான வெற்றி நிச்சயம். முக்கிய வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவும், முடிவு சாதகமாக இருக்கும். மன நிறைவு கிடைக்கும். புதிய யோசனைகள் நற்பலனைத் தரும். அவசரத்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று திருமணமான முயற்சியில் உள்ளவர்களுக்குச் சிறப்பான வரன் தேடி வரும். அரசு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிலும், வெளியிடத்திலும் மகிழ்ச்சியும், நலமும் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் உண்டு. குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க மும்முரமாகச் செயல்படுவீர்கள். குழந்தைகள் மீது கவனம் செலுத்த முடியாத சூழல் இருக்கும். உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண முதலீடு விஷயத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். காதலில் புரிதலும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாளாக அமையும். வேலை தொடர்பான விஷயத்தில் நிச்சயம் வெற்றி உண்டு. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குழந்தைகளின் பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வேலையில் வெற்றி, வளர்ச்சியும் எதிர்பார்க்கலாம். பயணங்களில் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் செயலில் புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பது நல்லது. வியாபாரம் அல்லது தனிப்பட்ட வேலை தொடர்பாக இனிமையான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள்.இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினரிடமிருந்து மரியாதை அதிகரிக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சுவாரஸ்யமான பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கவும் தாமதம் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பயனுள்ள நாளாக இருக்கும். பணியிடத்தில் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் முதலீடுகள் சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில், தொழில் தொடர்பான விஷயத்தில் சிறப்பான பலனை பெறுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் திட்டங்களில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய சொத்து வாங்குவது தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சராசரியான நாளாக இருக்கும். வாழ்வாதாரம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாருடன் சில வருத்தங்கள் ஏற்படும். தந்தையின் உதவியால் பிரச்சனைகள் தீர்ப்பதில் வெற்றி அடைவீர்கள். முதலீடுகள் விஷயத்தில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.