ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 26.08.2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் : 26.08.2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26, 2024, குரோதி வருடம் ஆவணி 10, திங்கட் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள சேர்ந்த சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தது கிடைத்து திருப்தி அடைவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு சிறப்பான லாபத்தை தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களின் செயல்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள். அரசு வேலை தொடர்பான விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும். இன்று கோபத்தை கட்டுப்படுத்தவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவது நன்மை தரும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பில்லை. உங்களின் எதிர்காலம் தொடர்பாக கவலை நெஞ்சில் தொற்றிக் கொள்ளும். தொழிலதிபர்கள் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அனைவரிடமும் கோபத்தை கட்டுப்படுத்தி அனுசரித்து செல்லவும். இன்று வேலை தொடர்பான சில சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து மகிழ்வீர்கள். உங்கள் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் செலவு அதிகரிக்கும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். இன்று எதிரிகளின் விமர்சனத்தையும், தடைகளையும் பொருட்படுத்தாமல் முன்னேறி செல்லவும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் புகழ் பரவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குழப்பம் தீரும். இன்று முக்கிய வேலைகளை செய்து முடித்து மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் புதிய சாதனைகளை படைப்பீர்கள். இன்று கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்திற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். இன்று கைநழுவி போன சில வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கோபத்தை கட்டுப்படுத்தி, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உங்களின் மனக்குறை தீரும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. இன்று நாள் முழுவதும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் செல்லும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்றைய தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு பதவியும், அதிகாரமும் கூறும். பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பீர்கள். இன்று மன அமைதி கிடைக்கும். பயணங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் . மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இன்று கோபத்தை கட்டுப்படுத்திச் செயல்படவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசின் சலுகை கிடைக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். இன்று உடல் நல பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று நிலுவையில் உள்ள வேலையை முடிக்க முடியும். பிறரிடம் சிக்கியுள்ள பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்வது, முடிவெடுப்பதை தவிர்க்கவும். முதலீடு விஷயங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்கள் வேலையை முடிப்பதில் கவனம் செலுத்தவும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனை பேசி தீர்க்கவும். திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். சொத்து தொடர்பான தகராறு தீரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நாள் முழுவதும் சிறப்பான லாபம் கிடைக்கும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதனமான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது உள்ளது. உங்களின் பேச்சை கட்டுப்படுத்தவும். இன்று உங்களுக்குப் பிடித்த ஒரு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உடல் நலன், மனநலம் சிறக்கும். இன்று திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் நடக்கும். புனித யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். இன்று நீங்கள் கொடுத்த கடனை வசூலிக்க ஏற்ற நாள். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.