1 43
இலங்கைசெய்திகள்

இரண்டு வருடங்களில் சாதித்துக் காட்டினோம்: ஜனாதிபதி ரணில் பெருமிதம்

Share

இரண்டு வருடங்களில் சாதித்துக் காட்டினோம்: ஜனாதிபதி ரணில் பெருமிதம்

“இரண்டு வருடங்களில் எந்த அரசும் செய்ய முடியாததை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். அதுவே நாட்டின் முன்னேற்றம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று முற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மேடையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் சிவலிங்கமும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், “இந்த மேடையில் எனக்கு றோயல் கல்லூரியில் கற்பித்த சிவலிங்கம் ஆசிரியர் இருக்கின்றார்.

13 – 14 வயதில் அவரிடம் கல்வி கற்றேன். 1961 ஆம் ஆண்டுகளில் நானும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அவரிடம் கற்றிருக்கின்றோம்.

எனவே, நாட்டை மீட்டெடுத்த பெருமையை அவருக்கும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்கிரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர்.

எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இளையோரின் எழுச்சி குறித்து ஆசிரியர் எங்களுக்கு கற்பித்தமை நினைவிருக்கின்றது.

அச்சமடைந்த நாட்டுக்குள் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அதனால்தான் 2022 ஆம் ஆண்டில் சவால் மிக்க தருணத்தில் எவரும் ஏற்காத நாட்டை நான் பொறுப்பேற்றேன்.” என்றார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...