இன்றைய ராசி பலன் 04.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூன் 4, 2024, குரோதி வருடம் வைகாசி 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்க வேண்டிய நாள். நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று சோம்பலை கைவிட்டு செயல்பட நல்ல வெற்றி கிடைக்கும். முக்கியமான வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்கள் கருத்துக்களை தைரியமாக முன்வைக்கலாம். இன்று வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியை மற்றும் செழிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்கலாம். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் பெரிய லாபம் பெற்றிட முடியும். இன்று உங்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். மூதாதையர் சொத்து தொடர்பான சர்ச்சையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
வார ராசிபலன் ஜூன் 3 முதல் 9 வரை : மேஷம் முதல் கன்னி வரை
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். பணியிடத்தில் இனிமையான பேச்சின் மூலம் மக்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். அதனால் வருத்தம் ஏற்படும். வேலைகளை செய்து முடிக்க சரியான திட்டமிடல் அவசியம். உங்கள் என் விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். இன்று செலவுகளை கவனமாக செய்வது அவசியம். திட்டமிட்டு செலவுகள் செய்யவும். நண்பர்கள் மூலம் உதவியும், ஆதரவும் கிடைக்கும். உங்களின் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். எந்த ஒரு முக்கியமான வேலையிலும் அவசரப்பட்டுச் செயல்பட வேண்டாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று செல்வம் பெருகக்கூடிய நாள். உங்களின் பொருளாதார நிலை குறித்த கவலை தீரக்கூடிய நாள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நிகழும். காதல் வாழ்க்கையில், துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். அதேசமயம் எந்த ஒரு வேலையிலும் கவனக் குறைவுடன் ஈடுபட வேண்டாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வாக்கு, கௌரவம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் மனைவியின் அன்பும், பரஸ்பர ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று புதிய வேலை திட்டத்தில் ஈடுபடுவீர்கள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலையில் நல்ல வெற்றி உண்டாகும். பழைய தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்வீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சமய நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்களின் படிப்பு மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். புதிய வேலைகளை தொடங்குவதிலும், பெரிய இலக்கை அடைவதிலும் கவனம் செலுத்துவீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் சிந்தனை மேம்படும். உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொழுதுபோக்கு மற்றும் தேவையற்ற விஷயத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் வேலைகளை செய்து முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முதலீட்டிலும் ஈடுபட வேண்டாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். சிலருடன் சேர்ந்து கூட்டாக செய்யும் வேலையில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். கவனமாக உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்யவும். இன்று பாராட்டு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் பரஸ்பர ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் ஆசை நிறைவேறும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பட்ஜெட் போட்டு செலவுகளை செய்வது நல்லது. உங்கள் வேலையில் விதிகளை முழுமையாக கடைப்பிடிப்பது அவசியம். கடினமான நேரத்தில் அனுபவ சாலைகளின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். இன்று கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடவும். உடல் பிரச்சனைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம், வீரம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்களின் பொருளாதாரத்தை மேம்படும். பயணங்கள் மூலம் அனுகூல பலனை அடைவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் முழு ஆதரவால் எந்த ஒரு வேலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குப் பெரிய சாதனைகளை படைக்கலாம். நல்ல லாபம் கிடைக்கும். இன்று உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு உண்டு. . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். வண்டி வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களின் ரகசியங்கள் மற்றும் மன உணர்வுகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- june month rasi palan
- june rasi palan
- nalaiya rasi palan
- new year rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan sun tv
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- vaikasi rasi palan
- zee tamil rasi palan