ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 03.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 03.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூன் 3, 2024, குரோதி வருடம் வைகாசி 21, திங்கட் கிழமை, சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் வருமானம் உயரும். உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். சமூகப் பிரச்சினைகள் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்துவீர்கள். தொலைதூரப் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு வேலையும் தைரியத்துடனும், வீரத்துடன் செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது அவசியம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவும் சச்சரவுகளை கவனமாக கையாளவும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்த உங்களுக்கான வருமான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள்.சேமிப்பு திட்டத்தில் ஈடுபடவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். வீடு மற்றும் பணியிடத்தில் அன்புக்குரியவர்களின் ஆதரவு நம்பிக்கையைத் தரும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இதனால் பிரச்சனை அதிகரிக்கும். இன்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இன்று சோம்பேறித் தனத்தை கைவிட்டு சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்களின் சிறப்பான பேச்சாற்றலால் மரியாதை அதிகரிக்கும். வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்கும் முயற்சி செய்யவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் மற்ற நாட்களை விட அன்று சிறப்பான பலனை பெற்றிடலாம். தேர்வில் சிறப்பான வெற்றி கிடைக்கும். படிப்பில் கவனத்துடன் செயல்பட கல்வியில் மேன்மை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று அனுகூலமற்ற சில ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த வேலையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிக்க பணியிடத்தில் அதிக நேரம் செல்லவிடுவீர்கள். வியாபாரப் போட்டிகளை சிறப்பாக கையாளுவீர்கள். சிறப்பான செயலால் புதிய சாதனைகளை படைத்தீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக ஆதரவை பெறுவீர்கள். பெற்றோரின் அன்பு கிடைக்கும். இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அந்தஸ்து, இந்த உயரும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த துறையில் நீங்கள் இருந்தாலும் அதில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். உங்களின் முயற்சிகளுக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருக்கவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் பழைய திட்டங்கள் நற்பலனை தரக்கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பாதை அமையும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியும், முக்கிய விவாதங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத நற்பலன்களை பெற்றிடுவீர்கள். உடல்நல பிரச்சனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். வாழ்க்கை துணையிடமிருந்து நிறைய ஆதரவையும், அன்பையும் பெற்றிடுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வழக்கு விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் விலகும். அன்புக்குரியவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். காதலில் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் தனிமையில் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உறவு வலுப்படும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாள். உங்களின் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய அமைப்பு கிடைக்கும். நிதி சார்ந்த சிலை சிக்கல்கள் ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். இன்று உங்களின் பணத்தை பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளிடம் கவனம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கலை மற்றும் திறமைகள் அதிகரிக்கும். வேலைகளை உற்சாகத்துடன் செய்து முடித்து மகிழ்ச்சியடைவீர்கள். எந்த ஒரு வேலையும் கட்டுப்பாட்டுடன், கவனத்துடன் செய்து முடிப்பது அவசியம். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். பெற்றோரின் அன்பு அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக அமையும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் ஆசைகள் நிறைவேறக்கூடிய நாள். குடும்ப உறவுகளில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை சரியாக செய்து முடிக்க முடியும். செலவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். இன்று தேவையற்ற பொருட்களை வாங்க எண்ணம் தோன்றும்.