ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை 16, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். வேலையில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். வேலையில், முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். அன்பானவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் கனவுகள் நிறைவேற நல்ல வாய்ப்பு உண்டு. இலக்குகளை அடைய முடியும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். இலக்குகள் அடைவதில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் பொறுமையுடன், சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபார விஷயத்தில் புதிய திட்டங்களை தொடங்க சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சற்று சங்கடமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் எண்ணங்கள், யோசனைகளில் கவனம் செலுத்தி செயல்பட வெற்றி உங்களுக்கு. பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். உங்கள் கனவுகள், இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றியும், பணபலமும் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவின் அவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிட நேரிடும். இன்று மன அமைதியும், நிம்மதியை பெற முயற்சி செய்யவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உணவு மற்றும் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். முதலீடு செய்தல் கவனம் தேவை. பயணங்கள் அனுகூல பலனை தரும். உங்களின் செயல் மேன்மையை தரக்கூடியதாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். உங்கள் உறவினர்களிடமிருந்து சிறப்பு பரிசு பெற வாய்ப்புள்ளது.திருமண வாழ்க்கையில் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று வேலையை முடிப்பதில் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று உங்களின் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய நாள். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் உத்தியோகத்தில் சுறுசுறுப்பாக செயல்படவும். இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதிக ஆர்வத்துடன் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். நன்றாக பணிகளில் தலைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும் என்பதால் நிதானத்துடன் செயல்படுவோம். திருமண வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். இன்று உங்கள் பணிகளில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தேவைப்படும். இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று யாரையும் நம்பாமல் உங்கள் உழைப்பை நம்புவது அவசியம். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவும். குடும்பத்தில் சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.இன்று குடும்பம் மற்றும் வேலை விஷயத்தில் புதிய திட்டத்தின் பொறுப்பை ஏற்க இயக்கம் வாய்ப்பை பெறுவீர்கள். முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீர்கள். வணிகத்தில் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலைகளில் வெற்றி அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பல வகையான எண்ணங்கள் மனதில் தோன்றி உங்களை தொந்தரவு செய்யும். குடும்ப பிரச்சனைகளால் சிரமப்படுவீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நிதி விஷயங்களில் நன்மை அடைவீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய செலவும் திருப்தியை தரும். ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய நாள். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வேலையில் வெற்றி நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களின் செயல்பாடுகளால் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முக்கிய விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்வது நல்லது.