இன்றைய ராசி பலன் 18.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2024, குரோதி வருடம் சித்திரை 5, வியாழக் கிழமை, சந்திரன் கடகம், சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை, மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லை தரும் நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். உங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். இன்று யாரையும் அதிகமாக நம்ப வேண்டும். இன்று எல்லா விஷயத்திலும் அவசியமில்லை என்பதை உணர்ந்து செயல்படவும். பண பற்றாக்குறை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும்.. கடின உழைப்பால் நல்ல வெற்றியை பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது .இன்று உங்களிடம் புதிய ஆற்றல், புத்துணர்ச்சி உணர்வீர்கள். உங்களின் முதலீடு மூலம் லாபத்தை பெறுவீர்கள். தொழில் விஷயத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அன்பு நிறைந்ததாக இருக்கும் .
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் நல்ல பலன்களை பெறுவீர்கள். நிதி சார்ந்த விஷயத்தில் வலுவாக இருப்பீர்கள். என்று உங்கள் பங்குதாரர்களிடம் வாக்குவதில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பணியிடத்தில் அலுவலக அரசியல் லிருந்து ஒதுங்கி இருக்கவும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். புதிய வேலையை தொடங்கும் முன் கவனமாக சிந்தித்து செயல்படுவோம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் அதிக நேரத்தை செலவிட வேண்டியது இருக்கும். இன்று உங்கள் வேலைகளை பொறுமையாகவும், கவனத்துடனும் செய்து முடிக்கவும். உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. எந்த ஒரு செயலிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை தொடர்பாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களின் முக்கிய வேலைகளை முடிப்பதில் அன்புக்குரியவர்களின் உதவியை கேட்க வேண்டியது இருக்கும். இன்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் முயற்சிக்கவும். நிதி விவகாரங்களை கவனமாக கையாளவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். அனைத்து விஷயத்திலும் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் என் நிறைவேறாத ஆசைகள் நிறைவேற்றி மனமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களின் வேலைகளை முடிப்பதில் மும்முரமாக செயல்படுவீர்கள். மாணவர்கள் படிப்பை சிறப்பாக செயல்படுவார்கள். சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் எங்கே இருக்கிறீர்கள். இன்று உங்களின் உறவுகளை அனுசரித்து செல்லவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலை கடின உழைப்பின் மூலம் வெற்றி பலனை அடைவீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறும். வாழ்க்கையில் புதிய உயரத்தை தொட முடியும்.. தொழிலில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் விரும்பிய படிப்பில் சேர முயற்சி சாதகமான பலன் தரும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் அணுசக்தி செல்லவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் கடின உழைப்பிற்கான வெற்றியை பெற்றிடுவீர்கள். வேலை விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் எண்ணங்களை தெளிவாக வைத்துக் கொள்ளவும். புதிய வேலை தொடங்குவது தொடர்பான எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்கவும். . உணவு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான சாதக சூழல் உள்ளது. குடும்ப உறவுகளுடன் நல்லுறவைப் பேணவும். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் இனிமையான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கிற்காக அதிகமாக செலவிடுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மனதில் பல்வேறு எண்ணங்கள் வந்து செல்லும். இன்று குடும்ப பிரச்சினைகளால் கவலைப்படுவீர்கள். இன்று உங்கள் பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படவும். உணவு, ஆரோக்கிய கவனம் செலுத்தவும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று வருமான ஆதாரம் கூடும். சொத்து, தொழில் ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று எந்த ஒரு வேலையிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேளையில் கடின முயற்சி தேவைப்படும். புதிய வேலை, தொழில் தொடங்குவதற்கு சாதகமான நாளில்லை. உங்களின் எந்த ஒரு வேலையிலும் கவனம் தேவை. இன்று மன அழுத்தம், சோர்வை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
- 2024 rasi palan
- april rasi palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- nalaiya rasi palan
- new year rasi palan
- new year rasi palan 2024
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- thursday rasi palan
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- vara rasi palan shelvi
- zee tamil rasi palan