இன்றைய ராசி பலன் 31.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மார்ச் 31, 2024, சோபகிருது வருடம் பங்குனி 18, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள சேர்ந்த அஸ்வினி, பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும்.. உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவதற்காக தாராளமாக செலவு செய்வீர்கள். இன்று உங்கள் வியாபாரத்தில் கடின உழைப்பும், உங்கள் திட்டங்களில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கமாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதிநிலை மேன்மை பெறக்கூடிய நாளாக இருக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உடல்நிலை பிரச்சினை தொடர்பாக, உங்கள் வேலைகளை முடிப்பதில் சிரமம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நிதானமாக நடந்து கொள்ளவும். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மாணவர்கள் கல்வி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பெற்றோருடன் ஆன கருத்து வேறுபாடு நீங்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வணிகம் தொடர்பான திட்டங்கள் வேகம் பெறும். உங்களின் பயணங்கள் அனுகூல பலனை தரக்கூடியதாக இருக்கும். என்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை குறித்த கவலை ஏற்படும். சட்டம் சார்ந்த விஷயங்களில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண பாக்கியம் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு தொல்லை தரக்கூடிய நாளாக இருக்கும். திடீர் உடல் நலக்குறைவு கவலை தரும். மனைவியின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். பணியிடத்தில் உங்களின் சூழல் சற்று சாதகமற்றதாக இருக்கும். இன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று காதல் விஷயத்தில் , புத்தியை விட, மனதை கேட்க வேண்டிய நாள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறாமல் போகலாம். உங்களின் விருப்பங்கள் நிறைவேற்ற அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று மிகவும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தொழில் சார்ந்த பிரச்சினைகளில் நிவாரணம் கிடைக்கும். வேலை நிமித்தமாகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உங்களின் முழுமை அற்ற பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்க்க, சமாதானம் பேச வேண்டிய நாள். பண பரிவர்த்தனை தொடர்பான எந்த ஒரு முடிவையும் மிக கவனமாக எடுக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவும். பணியிடத்தில் எதிரிகள், உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். இன்று மன அழுத்தங்கள் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். பலவீனமாக உணர்வீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களில் நம்பிக்கை அதிகரிக்க கூடிய நாள். செலவுகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். நிச்சயம் அதற்கான சிறப்பான பலனை பெறுவீர்கள். விரும்பிய லாபத்தை பெற முடியும். அதிகரித்து வரும் செலவுகள் குறித்து சற்று கவலைப்படுவீர்கள். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் மன மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும்.
- 2023 rasi palan
- april matha rasi palan 2024
- april rasi palan
- april rasi palan 2024
- daily rasi palan
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- matha rasi palan 2024
- nalaiya rasi palan
- new year rasi palan
- new year rasi palan 2024
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- zee tamil rasi palan