இன்றைய ராசி பலன் 12.03.2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மார்ச் 12, 2024, சோபகிருது வருடம் மாசி 29, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள ஆயில்யம், மகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிப்பீர்கள். உங்கள் வேலைகளை சரியான நேரத்தை முடிக்க புத்திசாலித்தனமாகச் செயல்படவும். இன்று எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வார்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒருவரின் திருமணம் குறித்த பிரச்சினைகள் தீரும். வேலை, கேள்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.பணியிடத்தில் பாராட்டுக்கள் பெறுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கும். யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், அதை திருப்பி செலுத்தும் விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஏமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை. இல்லை எனில் பரஸ்பர உறவு விரிசல் ஏற்படும். இன்று உங்கள் வேலையில் அலைச்சல் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்..
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மூத்த உறுப்பினர்களின் உதவியாளர் குடும்பத்தில் உள்ள பிரச்சனை கள் தீரும். வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பணம், உதவி தொடர்பான விஷயங்களின் சதக பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை தொடங்க உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் துணையுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். குடும்பத்தினருடன் இருக்கக்கூடிய மனக்கசப்புகள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமண வரம் அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதி நிலைமையை வலுவாக இருக்கும். இன்று வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று உங்கள் குடும்பத்தில் பெற்றோர் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாட்கள் தொழில் தொடர்பான பிறந்த பிரச்சனைகள் இன்று தீரும். வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள், இன்று வேலை தொடர்பாக பயணம் செல்ல வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தொழில் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் நீங்கி, லாபம் கிடைக்கும். வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நல்ல வேலை அமையும். உங்கள் துணையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிக சிந்தனை இருக்கும். உங்களின் முடிவு எடுக்கும் திறனை முழுமையாக பயன்படுத்துகிறீர்கள். உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சில நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தீர்கள். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்களை தரும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முன், அனுபவசாலிகள் கருத்தை கேட்பது நல்லது. இன்று ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். சரியான வழியில் உங்களின் நேரத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தவும். வியாபாரிகளுடன் உறவு மேம்படும். பணியிடத்தில் உங்களின் திறமையை நிரூபிக்க முடியும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைகள் குறித்து மற்றவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். இன்று உங்கள் செயல் திறனை நம்பி நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் பிள்ளைகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் தீரும். பெரிய முதலீடு செய்வதற்கு முயற்சி எடுப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மும்முரமாக செயல்பட கூடிய நாள். சொத்து, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான நாளாக இருக்கும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய வேண்டிய நிலை இருக்கும். இதனால் மனம் சற்று கவலை அடையும். இன்று உங்களின் வேலைகளை முடிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.. உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கை இனிமையானதாக அமையும். என்ற நண்பர்கள் அல்லது சிறப்பான நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் தொழில் அல்லது வேலை தொடர்பான ஆனால் தங்கள் தீரும். உங்கள் துணையின் அன்பும் ஆதரவும் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வேலையில் நிதானம் தேவை.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vaara rasi palan
- vara rasi palan
- vara rasi palan shelvi