tamilni 397 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 25.01.2024 – Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 25.01.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜனவரி 25, 2024, சோபகிருது வருடம் தை 11, வியாழக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று துணையின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் பெரும் லாபத்தை பெறலாம். வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். இன்று காயம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை. புதிய வேலை,தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கோபத்தையும், உற்சாகத்தை கட்டுப்படுத்தவும். இன்று நாள் பட்ட நோயிலிருந்து விடுபடுகிறீர்கள். வண்டி வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறு கூட பெரிய பிரச்சனையை தரக்கூடும். நண்பர்கள் உறவினர்களின் உதவி சிறப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்த்த வேலைகள் முடியும். இன்று செலவுகள் அதிகரிக்கும். என் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் பின்னாடி உங்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மோதல்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எதிர்பார்த்த காரியங்களில் தடை ஏற்படலாம். கவலையும், பதற்றமும் நிறைந்ததாக இருக்கும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் அமைதி கிடைக்கும். இருப்பினும் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்ளவும். கணவன் மனைவியிடையே பரஸ்பர இணக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். உங்களின் பேச்சையும், சோகத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மனைவியின் ஆதரவை பெறுவீர்கள். சொல்லிச் சார்ந்த பயணங்கள் வெற்றி பெறும். எதிர்பாராத லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் உரிமைகள் கூடும். சூதாட்டம், பந்தயங்கள் போன்ற விஷயங்களை தவிர்க்கவும். முதலீடு சாதகமாக இருக்கும். குழந்தைத்தனத்தை கைவிடுவது அவசியம். குடும்ப வாழ்க்கையில் இனிமையும், நிம்மதியும் கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய திட்டங்கள் வகுத்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நற்பெயரும், ஆசையும் நிறைவேறும். உத்தியோகத்தில் ஆதிக்கம் நிலைபெறும் வருமான ஆதாரங்கள் கூடும். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். முக்கிய வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் போல் தொழில் நடக்கும். உத்தியோகத்தில் இணக்கமான சூழல் இருக்கும். முதலீடுகள் சாதகமான பலனை தரும். இன்று கோவிலுக்கு செல்லுதல், ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பரஸ்பர ஒருங்கிணைப்பு இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலையில் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம். இன்று லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வீட்டிலும், வெளியிலும் சூழல் சாதகமாக இருக்கும். இன்று செலவு செய்வதில் எச்சரிக்கை தேவை.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.வருமானம் குறையும். பணிசுமை அதிகரிக்கும். இன்று யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று சில சோகமான செய்திகள் வரும். அதனால் எதிர்முறையான எண்ணங்கள் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பயணங்கள் வெற்றியடையும். சிலருக்கு கண் வலி, உடல் வலி வாய்ப்புள்ளது. இன்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தவும். தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமான பலனை தரும். ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்று இனம் தெரியாத பயம், பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்ட வேலைகள் செய்து முடிக்க முடியும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து, விழா. சுவையான உணவுகளை உண்டு உசிப்பீர்கள். அறிவார்ந்த பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். சமூகத்தில் மதிப்பும், மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் லாபகரமானதாக இருக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சில சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறலாம். பிறரின் வேலையில் தலையிட வேண்டாம். இன்று பயணத்திட்டங்களை ஒத்தி வைப்பது நல்லது.கவனமாக வாகனங்களை ஓட்டவும். இன்று துர்க்கை அம்மன் வழிபாடு செய்து எந்த ஒரு செயலையும் தொடங்கவும்.

Share
தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...