ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 27.10.2023 – Today Rasi Palan

tamilni 330 scaled
Share

​இன்றைய ராசி பலன் 27.10.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் அக்டோபர் 27, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 10 வெள்ளி கிழமை, சந்திரன் கும்பம், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சுபமுகூர்த்த நாளான இன்று உங்களுக்கு சுப யோகங்கள் காத்திருக்கிறது. தடைப்பட்ட திருமணங்கள், இரண்டாவது திருமணத்திற்கு முயல்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய அற்புத நாள்.
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதில் உற்சாகமும், தைரியமும் கிடைக்கக்கூடிய நாளாக அமைய உள்ளது. எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சந்திர பகவானின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு தன லாபங்கள் உண்டாகும். பங்கு சந்தை முதலீடு நல்ல லாபத்தை தரும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நீங்கள் நல்ல தெளிவான சிந்தனையுடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். 5ம் இடத்தில் இருக்கும் ராசி அதிபதி புதன் பகவான் சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இன்று மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி நாதன் சந்திரன் ராகுவுடன் இருப்பதால் உங்களுக்கு மன கிலேசம் ஏற்படும். இன்று எண்ணிய காரியங்கள் நிறைவேறும். காதலர்களுக்கு நல்ல பலன், செய்திகள் கிடைக்கும் நாளாக அமையும். இன்று சுப காரியங்கள், சுப செயல்கள் செய்ய சாதகமான நாளாக அமையும்.
இன்று வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதும், எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்யவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தை தரக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்கள் உங்களை தேடி வருவதும், விருந்து, கேளிக்கை போன்ற விஷயங்களில் கலந்து கொள்வதற்கான சிறப்பான நாளாகவும், மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய உறவினர், நண்ப்ர்கள் மூலம் குடும்பத்தில் நன்மை உண்டாகும். இன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனம் அமைதியாக இருக்கும். காதலர்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். மன குழப்பங்கள் தீரும். நீண்ட நாட்களுக்கு பிறகு சிந்தனையில் நல்ல தெளிவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். விநாயகர் வழிபாடு நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் முன்னேற்றத்தை தரக்கூடிய நாளாக அமையும். மனதில் இருக்கும் குறைகள் தீரும். இன்று நரசிம்மர் வழிபாடும், ஆல்யாத்தில் அரிசி, வெல்லம் தானம் தருவது நீங்கள் எடுக்கும் முடிகளில் வெற்றியும், மன பயம், குழப்பங்கள் தீரும். கடன் பிரச்னைகள் தீர வழிபிறக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதி கிடைக்கும். 5ம் இடத்தில் இருக்கும் ராகு, சந்திர பகவானால், குழந்தைகள் மூலம் சிறு சிறு மன வருத்தம், அவர்களினால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தம்பதியிடையே சிறு கருத்து வேறுபாடு, மன வருத்தம் வந்து செல்லும். வெள்ளிக்கிழமையான இன்று மகாலட்சுமி பிரார்த்தனை செய்யவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். இன்று மன சஞ்சலங்கள் தீரும். துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய மன அமைதி உண்டாகும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனக்குறைகள் இல்லாத நாளாக இருக்கும். வேலையில் புதிய மாற்றம் வரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம், எதிர்பார்த்த வகையில் பணியில் உயர்வு கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மன சலனங்கள் தீரக்கூடிய நாளாக அமைகிறது. காதலர்களுக்கு நல்ல வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். ஒருசிலருக்கு திருமண யோகங்கள் கைகூடும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். விநாயகர் வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரசனைகள் தீரும். பல ஆண்டுகளாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு சில விஷயங்கள், பொருட்கள் உங்களை வந்தடையும். காலை வேளையில் அன்னதானம் செய்வதும், வெள்ளிக்கிழமையான இன்று சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க எடுத்த காரியத்தில் வெற்றியும், நன்மையும் வந்து சேரும்.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...