ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 அக்டோபர் 2023 – Today Rasi Palan

Share
1 13 scaled
Share

இன்றைய ராசி பலன் 26 அக்டோபர் 2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் அக்டோபர் 26, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 9 வியாழக் கிழமை, சந்திரன் கும்பம், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் 12ம் இடத்தில் ராகுவுடன் இருப்பதால் அலைச்சல்களும், விரயங்களும் இருக்கும். அதனால் இன்று முதலீடுகளை தவிர்க்கவும். இன்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும். வியாழக்கிழமையான இன்று ஜென்மத்தில் குரு இருப்பதால் அவரின் அனுக்கிரகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்
​ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று லாபத்தில் இருக்கக்கூடிய ராகு மற்றும் சந்திர பகவானால் உங்களுக்கு நல்ல லாபமும், வெற்றியும் உண்டாகும். விரயத்தில் குரு இருப்பதால் விரய செலவுகள் தருவார் என்றாலும், அது உங்களுக்கு சுப விரயங்களாகவும், நல்ல வெற்றியை தரக்கூடியதாகவும் இருக்கும். இன்று உங்களின் உணர்வுகளுக்கும், செயலுக்கு அங்கீகாரமும் கிடைக்கும்.​

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உழைப்பு அதிகமாக இருக்கும். 10ம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு மற்றும் சந்திர பகவான் கடின உழைப்பையும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும். இன்று நல்ல தன லாபத்தை எதிர்பார்க்கலாம். பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண வரவு உங்கள் கைக்கு வந்து சேரும். இன்று மனதிற்கு அமைதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் சாதக பலனைத் தரும். குருவாரத்தில் அன்னதானங்கள் செய்யவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்ல மன தெளிவு இருக்கும். நீண்ட நாட்களாக உங்கள் நண்பர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடு மன நிலை மாறும். குடும்ப பிரச்னைகள் தீருதல், விட்டுப்பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. ராகுவுடன் சந்திரன் இருந்தாலும் கூட உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். சிவாலய வழிபாடு சிறப்பான பலன் தரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்று மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உண்டு. இன்று சந்திரன், ராகுவுடன் கூடி இருக்கக்கூடிய நிலையால் நண்பர்களிடம் இருக்கும் சண்டை சச்சரவுகள், மனக்குறைகள் தீரும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று 7ம் இடத்தில் சந்திரன் ராகுவுடன் இருப்பதும், ராசியில் கேது இருப்பது கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மேலும் இன்று எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இன்று காதலர்களுக்கு ஏற்ற நாளாக அமைகிறது. காதலர்களின் மனக்குறை நீங்கும். ஒரு சிலருக்கு சுபங்கள் ஏற்படும். திருமணம் கைகூடும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்ல ஆனந்தமான நாள். 6ம் இடத்தில் சந்திரன் ராகுவுடன் இருப்பதால் தன லாபங்கள் ஏற்படும். இன்று புதிய வியாபார முயற்சிகள் வெற்றி தரும். மனக்குறை தீர நண்பர்களின் உ தவி கிடைக்கும். இன்று காலை வேளையில் நல்ல செய்திகள் வந்து சேரும். தட்சிணாமூர்த்திக்குத் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களால் கடன் தொல்லை ஏற்படும். 6ம் இடத்தில் இருக்கக்கூடிய குருவின் அமைப்பால் உங்களின் தன லாபங்கள் குறையும். நீங்கள் கொடுத்த பணம் கேட்கும் போது நண்பர்களுடன் மன வருத்தம் ஏற்படும். அதனால் இன்று எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாகக் கையாளவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக இருக்கவும். குரு வாரமான இன்று விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. மன சஞ்சலங்களும் தீரும். நீண்ட தூர பிரயாணங்கள் வெற்றியைத் தரும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்ல மன நிறைவு கிடைக்கும். சந்திரன் ராகுவுடன் சேர்ந்து இருப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மகர ராசியினருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இன்று விநாயகர் வழிபாடு செய்ய மன ஆறுதல் கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று 2ம் இடத்தில் ராகு சந்திரன் இருப்பதும், 8ம் இடத்தில் கேது இருப்பது உங்களின் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும். ஒருசிலருக்கு திருமண யோகங்கள் கைகொடுக்கும். இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வதும், குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் சந்திரன், ராகு சேர்ந்து இருப்பது மன குழப்பத்தை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் இன்று ஏறுமுகம் தரக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையும், குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் ஒற்றுமையில் சலசலப்பு ஏற்படும்.
இன்று பெருமாள் ஆலய வழிபாடும், கருடனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் நன்மை தரும்.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...