இன்றைய ராசி பலன் 16.09.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2023, சோபகிருது வருடம் ஆவணி 30 சனி கிழமை. சந்திரன் சிம்ம ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். பிரதமை திதி நடக்கக்கூடிய இன்று மரண யோகம் உள்ள நாள். கும்ப ராசிக்கு சதயம், பூரட்டாதி சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசிக்கு ஆறாம் இடத்தில் சந்திரன், செவ்வாய் சஞ்சாரம் நடப்பதால் அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சற்று உடல்நல கோளாறு ஏற்படலாம். கண் வலி, காது, தொண்டை போன்ற பிரச்சனைகளால் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
இன்று வைத்தீஸ்வரர் சுவாமியை வழிபடவும். இன்று ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய உடல்நல பிரச்சனையை தீர்ப்பதோடு, கடன் தொல்லைகளும் தீரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய நாளாக இருக்கும்.பங்கு சந்தை முதலீடு, போட்டிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.வியாபாரிகளுக்கும், புதிதாக வியாபாரம் தொடங்குபவர்களுக்கும் நல்ல லாபம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று ரிஷப ராசி நேயர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இன்று குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைப்பதோடு அதற்கான மருத்துவத்திற்குச் சாதகமான நாள். திருமண யோகம் கைகூடும் நாளாக இருக்கும்
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இன்று ஆஞ்சநேயரை வழிபாடு செய்யவும். புனர்பூசம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் இன்று சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்குத் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லைகள் நீங்கும்.
ஏமாற்றங்கள், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய நஷ்டங்கள், புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற பிரச்சனைகள் தீரும் மனக்குழப்பங்கள் தீரும். கடன் தொல்லை கட்டுக்குள் வரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன், செவ்வாய் பகவானுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சிறு மன குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. பிபி, நீரிழிவு நோய் போன்றவற்றால் சிகிச்சை பெற்று வருபவர்கள் அது தொடர்பான மருத்துவத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சூரியன் புதனுடன் சேர்ந்து இருப்பதும், ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக இருக்கவும்.
இன்று அனுமான் வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் மன குழப்பத்தை தருவதாக இருக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்குப் பணம் வசூல் செய்வது தொடர்பான மாற்றம் ஏமாற்றம் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று வண்டி வாகனம் வாங்குவது விற்பது தொடர்பாக நல்ல முடிவுகள் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சொத்து தகராறு, பண பிரச்சனைகள்போன்ற விஷயங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று புதிய வியாபார தொடக்கம் வெற்றியை தரும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.
பைரவருக்கு இன்று தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும், கணவன் மனைவியிடையிலான பிரச்சனைகளும் தீரக்கூடிய நாளாக இருக்கும். இன்றைய நாளில் விருச்சிக ராசியினர் கடன் கொடுப்பதும், கடன் வாங்குவதும் தவிர்ப்பது நல்லது.
இன்று முருகன் வழிபாடு செய்வது சிறந்தது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீரும். இன்று குடும்ப ஒற்றுமை மேம்படும். இன்று உங்களுக்கு சுப செய்திகளும், சுப செலவுகளும் காத்திருக்கிறது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தி தரக்கூடிய நாளாக இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு மனதில் குழப்பமும், பயமும் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. இன்று நல்ல ஆரோக்கியம் இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நவகிரக வழிபாடு செய்வது நல்லது.ஒரு நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் நீங்கள் நிற்கக்கூடிய இந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. வழக்கு, விசாரணை போன்ற விஷயங்களை இன்று ஒத்தி போடுவது நல்லது.
ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வருமானங்கள் நன்றாக இருக்கும். புதிய விஷயங்கள் செய்வதில் நண்பர்களின் ஆலோசனைகளை தவிர்ப்பதும், நண்பர்களுடன் சேர்ந்து செய்வதும் தவிர்ப்பதும் நல்லது. ஏழாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் கணவன் மனைவியிடையே சிறு மன கசப்பு ஏற்படும். நவகிரக வழிபாடுகள் சிறந்தது. குடும்ப ஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு, ராகுவின் அமைப்பு நல்ல பலனை தரும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- dhina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan sun tv
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- today palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan