இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30, 2023, சோபகிருது வருடம் ஆடி 13 புதன் கிழமை. ஆவணி அவிட்டம் எனும் அற்புத நாள். சந்திரன் கும்ப ராசியில் அவிட்டம் சஞ்சரிக்கிறார். பெளர்ணமி திதி நடக்கக்கூடிய இன்று மரண யோகம் உள்ள நாள். கடக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்கு சந்திரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு இன்று நல்ல லாபகரமான நாளாக இருக்கும். இன்று பெளர்ணமி திதி, புதன் கிழமை சேர்ந்திருக்கக்கூடிய நாளில் பெண்கள் பொன் நகைகள் வாங்கலாம்.
வியாபாரிகளுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்றைய நாளில் புதிய வியாபாரம், தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்குச் சாதகமான நாளக இருக்கும். வியாபாரம் தொடங்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
குல தெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் மனதிற்கு சந்தோஷமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறிய குறைபாடுகள் தீரும். இன்று பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில பொருட்கள், விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும். தன லாபம் உண்டாகும். இழுபறியிலிருந்து வந்த கடன் பிரச்னைகள் தீரும். செல்வ, செழிப்பான நாளாக இருக்கும்.
இன்று குல தெய்வ வழிபாடு, அன்னதானம் செய்வது மிக சிறப்பான பலனைத் தரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு இன்று உயர்வைத் தரக்கூடிய நாளாக இருக்கும். பெண்களுக்கு சிறப்பான நாள். மருத்துவ செலவுகள் குறையலாம். நீண்ட நாட்களாக இருக்கும் தூக்கமின்மை பிரச்னை, குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்னைகள், குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் தீர்ந்து மனதிற்கு நிம்மதி கிடைப்பதற்கான நாளாக அமையும். இன்றைய நாளில் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். திருமண முயற்சிகள் நிறைவேறும்.
பள்ளி கொண்ட பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்கு சந்திரன் 8ல் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சந்திராஷ்டம தினமாக இருப்பதால் இன்று நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியிலும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவி இடையே சில மனக்கசப்புகள் வரக்கூடும். பொறுமையும், நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்களின் செலவு விஷயத்தில் கவனம் தேவை.
இன்று சிவ வழிபாடும், அன்னதானம் செய்வதும், பச்சரிசி தானம் செய்தல் போன்ற விஷயங்கள் நல்ல பலனைத் தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் மனக்குறை ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். சந்திரன் 7ல், ராசியில் சூரியன் இருப்பதால் உங்களுக்கு மனக்கிலேசம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதைத் தவிர்க்கவும்.
சகோதரர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று மாலை உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக செலவிடுவீர்கள்.
இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்வதும், கிருஷ்ணர் ஆலயத்தில் துளசி மாலை சாற்றி வழிபாடு செய்ய எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
ரக்ஷா பந்தன் 2023: 200 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகம் – இந்த ராசிகளுக்கு சனி, குரு தரும் அற்புத பலன்கள்
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு இன்று பல நாட்களுக்கு பின்பு சந்திக்கக்கூடிய நண்பர்கள் மூலம் பண உதவிகள் கிடைக்கலாம். உங்கள் எல்லா வேலைகளையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்த தடைகள் கடின உழைப்பால் மட்டுமே நீங்கும். உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியையும் ஒத்துழைப்பையும் காண்பீர்கள்.
இன்று விநாயகர், வெங்கடாஜலபதி வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும்
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினர் இன்று ராசியில் இருக்கும் கேது, 5ல் இருக்கும் சந்திரனால் உங்களுக்கு தன லாபங்கள் ஏற்படும். இன்று தங்கம், வெள்ளி வாங்குவதற்கு பெண்களுக்கு உகந்த நாள். இன்று உங்களின் உடன் பிறப்புகள் மூலம் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படும். இன்று உங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு செல்வம் பெருகும். உங்கள் நிதி நிலை பலப்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களின் மனக்குறைகள், குழப்பங்கள் தீரும். மனதில் பய உணர்வு நீங்கி தைரியம் ஏற்படும். குழந்தைகளால் ஏற்படும் பிரசனைகள் தீரும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
வீடு மற்றும் வியாபாரம் இரண்டிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சில் சாந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இன்று முருகப் பெருமான் வழிபாடு செய்ய சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு இன்று எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி ஏற்படக்கூடிய நாள். நீண்ட தூர பிரயாணங்கள் சிலருக்கு ஏற்படும். மனதில் இருக்கும் குறைகள் தீருவதற்கு ஏற்ற நாள். உங்களின் சகோதர, சகோதரிகளால் லாபம் ஏற்படும்.
உங்கள் புகழ் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இன்று பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்றைய பெளர்ணமி திதியில் அன்னதானம் மேற்கொள்வது நல்லது. சிவன் ஆலயத்தில் பச்சரிசி தானம் செய்யவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு இன்று அலுவலகம் சார்ந்த குழப்பங்கள் தீரும். வழக்கு, விசாரணையில் இருக்கும் சிக்கல்கள், குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள், மன பாரம் தீரக்கூடிய சூழல் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தூக்கம் உங்களுக்கு கிடைக்கும்.
மகர ராசியினருக்கு மனம், உடல் கஷ்டங்கள் தீர்ந்து மனதிற்கு இதமான நாளாக அமையும்.
இன்று விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது நன்மை தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும். நண்பர்களுக்காக அலைய வேண்டிய சூழல் ஏற்படலாம். இருசக்கர வாகனம் வாங்குதல், மாற்றுவது தொடர்பான விஷயங்களிலும், வீடு மாற்றம் செய்வதற்கு ஏற்றதான நாளாகவும் அமையும்.
இன்று எந்த ஒரு முடிவையும் விவேகத்துடனும் எடுக்க மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும்.
இன்று பெளர்ணமி திதி என்பதால் அன்னதானம், குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி நேயர்களுக்கு இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனக்கஷ்டம் தீர்ந்து குடும்பத்தில் இருக்கும் சொத்து தகராறு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு, நீண்ட நாட்களாக இருந்த எந்த ஒரு பிரச்னையும் தீரும்.
சமூகத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பொது ஆதரவும் அதிகரிக்கும். இன்று சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
பெளர்ணமி திதியான இன்று மகா விஷ்ணு வழிபாடு செய்யவும்.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- magaram rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- viruchigam rasi palan 2024 in tamil