Connect with us

ஜோதிடம்

முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை – யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?

Published

on

1736537 amava

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும்.

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது.

ஆகவேதான், ஆடி அமாவாசை விரத வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனித தலங்களில் கடலில், நீர் நிலைகளில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும்.

மேலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். அன்று நீர் நிலையில் பித்ருகள்பூஜை செய்து வேதவிற்பன்ன ருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதன் பின் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் முன் தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயாசத்துடன்படையல் போட்டு வழிபட வேண்டும்.

1736881 virahtam

அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகி ஓடும். அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும். முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும்.

அமாவாசை முதலான நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும் போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தாய் தந்தை இல்லாத பெண்கள், அதேசமயம் கணவரை இழந்த பெண்கள், அமாவாசை நாளில் விரதம் இருக்கலாம். ‘எனக்கு தாய் தந்தை இல்லை. ஆனால் அண்ணன் தம்பி உண்டு’ என்றிருக்கும் பெண்கள், அவர்களுக்கு கணவர் இருக்கும் பட்சத்தில் விரதம் மேற்கொள்ளக்கூடாது.

#LifeStyle

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilni 390 tamilni 390
ஜோதிடம்6 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 19, 2024, சோபகிருது வருடம் பங்குனி 6, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம்...

tamilni 367 tamilni 367
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 18.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 18.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 18, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 327 tamilni 327
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 17.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 17, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilnaadi 118 tamilnaadi 118
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 16.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 16.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 16, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 301 tamilni 301
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் -15.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் -15.03.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 15, 2024, சோபகிருது வருடம் பங்குனி 2 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilni 265 tamilni 265
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 14.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 14.03.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 14, 2024, சோபகிருது வருடம் பங்குனி 1, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilni 252 tamilni 252
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 13.03.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 13.03.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 13, 2024, சோபகிருது வருடம் மாசி 30, புதன் கிழமை, சந்திரன்...