Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (31.08.2021)

Published

on

astrology tr tamilnaadi

இன்றைய ராசி பலன்கள் (31.08.2021)

medamழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

 

edapam புதிய முயற்சிகள் சிறிது தாமதிக்கலாம். பிள்ளைகளை அனுசரித்து செல்லுதல் அவசியம். வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.   வீண் செலவுகள் கட்டுப்படும். மற்றவர்களை அனுசரித்து சென்று பலன் பெறுவீர்கள். தாய் வழியால் ஆதாயம் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்த்தல் நன்று.   மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

 

mithunamசாதிக்கக்கூடிய நாளாக இன்று அமையும். தன்னம்பிக்கை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவுகள் குறையக்கூடும். விற்பனையும் லாபமும் ஏற்படும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையைத் தவிருங்கள். எதிர்பாராத பணவரவு ஏற்பட வாய்ப்பு அதிகம். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

 

kadakamகுழந்தைகளின் அறிவை கண்டு மெய்ச்சுவீர்கள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். பணியாளர்களுக்கு உற்சாகம் பிறக்கும். நட்பு வட்டம் விரிவடையும். புதிய முயற்சிகள் சாதகமான அமைய வாய்ப்புண்டு. குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும்.

 

simmamசுறுசுறுப்பாக செயற்படும் நாள். கணவன்– மனைவிக்கிடையே பிணக்கும் நீங்கும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுக்கள் இடம்பெறும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். முருகப்பெருமானை வழிபட்டால் மகிழ்ச்சி உண்டாகும். திடீர் பண வரவு உண்டாகும். புது முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

 

kanniஇன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். மனதில் சிறு குழப்பங்கள் உண்டாகி மறையும். வியாபாரம் சிறப்படையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சவால்கள் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். உறவினர்கள் அனுசரணையுடன் நடப்பர்.பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளை தவிருங்கள்.

 

thulaamபொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். விமர்சனங்கள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மகிழ்ச்சி பிறக்கும் நாள். பழைய நட்பு மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சுபச் செய்தி வரும். பிள்ளைகளுக்கு செலவு செய்வீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

 

viruchchikamபுதிய முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும். ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சிறந்த நாள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சக வியாபாரிகள் அனுசரித்து செல்வர். சுபநிகழ்ச்சிகள் சாதகமாகும். எதிரிகளின் விளைவுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் அன்பு உண்டாகும். கடனை மீளப் பெறுவீர்கள்.

 

thanusuசாதனையை உண்டுபண்ணுவீர்கள். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதுக்கு உற்சாகம் உண்டாகும். நண்பர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். கணவன்– மனைவி இடையே அந்நியோன்யம் உண்டாகும். எதிர்பாராத பொருள் கிடைக்கும். செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மகிழ்ச்சி உண்டாகும்.

 

magaramதம்பதிகளிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். உடல் நலக் குறைவு ஏற்படக்கூடும். நன்மைகள் அதிகரிக்கும். சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். காரியங்களில் சிறிது தடை ஏற்படலாம்.  தீய எண்ணம் அகலும். மற்றவர்களின் மனதைப் புரிந்துகொண்டு பேசுவது நல்லது.

 

kumbamதன்னம்பிக்கை பிறக்கும் நாள். முடிவு எடுப்பதில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செய்தி வந்து சேரும். உறவினர்களிடமிருந்து நன்மைகளை பெறுவீர்கள். பணியிடத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றும் சாத்தியம் உண்டு. கவனம் தேவை. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். புது முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

 

meenamஎடுத்த காரியம் வெற்றியளிக்கும். எதிர்பார்த்த உதவி உறவினர்களால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பிரச்சினைகளை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தொழிலில் தொல்லைகள் நீங்கும். பணவரவு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையை அனுசரித்து செல்லுதல் அவசியம். சங்கடங்கள் தோன்றினாலும் சமாளிப்பது அவசியம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 08 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 08 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 07 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 07 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.10.2024 குரோதி வருடம் புரட்டாசி 21, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 06 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 06 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 6.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 20, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம்,...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 5.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 19, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 04 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 04 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 4.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 18 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 03 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 03 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 3.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 02 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 02 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 2.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 16, புதன் கிழமை, சந்திரன் கன்னி...