ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 16.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
tamilnaadi 118 scaled
Share

​இன்றைய ராசி பலன் 16.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 16, 2024, சோபகிருது வருடம் பங்குனி 2, சனிக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்த பழைய முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் மூத்த உறுப்பினர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடித்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் மதிப்பு மரியாதை சமூகத்தில் உயரும். இன்று மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்யுங்கள். பணியிடத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கவும். உங்கள் பொறுப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்ப வாய்ப்புள்ளது.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் உறவு மேம்படும். சகோதரத்துவம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.இன்று நண்பர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் புதிய முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றும் நடத்தையால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் வேலைகளை முடிப்பதற்காக அவசரப்பட வேண்டியது இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக அதிகம் செலவிட வேண்டிய நிலை இருக்கும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் பிறருக்கு கொடுத்த கடன் தொகையை திரும்ப பெற முயற்சிக்க சாதகமான நாள். வியாபாரம் தொடர்பான விஷயங்களை புதிய ஒப்பந்தங்களை மிகவும் கவனமாக செய்யவும். உங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் மரியாதை அதிகரிக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். உங்களின் நிதிநிலை மேம்படும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். புதிய வேலை முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு தொடர்பான விஷயங்களில் வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் ஆதரவு மன ஆறுதலை தரும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் முடிக்க அதிக நேரம் செலவிட வேண்டியது இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். உங்களின் இலக்குகளை அடைய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் உயர்கல்விக்கான முயற்சிகள் சாதக பலனைத் தரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வசதிகள் அதிகரிக்கும். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவுகள் மேம்படும். அனுபவம் உள்ள ஒருவரின் ஆலோசனை பெற்ற பின்னர் முதலீடுகளை மேற்கொள்ளவும். சட்டம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த வேலைகள் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் மனப்பிரச்சனைகளை பெற்றோர்களின் உதவியுடன் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வழக்கமான வேலைகளை முடிப்பதில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்து கருத்து வேறுபாடுகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று முதலீடு செய்ய நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும், செலவிற்கும் இடையே சமநிலையை பராமரிக்கவும். இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க மும்முரம் காட்டுவீர்கள். பணியிடத்தில் உங்களின் எதிரிகளின் ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டியது இருக்கும். தொண்டுப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...