mahintha.jpgg
கட்டுரைஅரசியல்

பதவி துறப்பாரா மஹிந்த?

Share

இலங்கை அரசியல் வரலாற்றிலே மிக முக்கிய புள்ளிகளுள் ஒருவராகக் கருதப்படுகின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, செயற்பாட்டு அரசியலுக்கு விரைவில் விடைகொடுக்கவுள்ளார் என்ற தகவல் மீண்டுமொருமுறை வெளியாகியுள்ளது.

இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு தகவல் வெளியாகியிருந்தாலும் பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அதனை நிராகரித்தன. எனினும், இம்முறை இன்னும் மறுப்பறிக்கை எதுவும் வெளியாகாததால், இந்தத் தகவல் உண்மையாக இருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

உடல் நலத்தைக் கருத்திற்கொண்டே மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை துறக்கவுள்ளார் எனக் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் இன்னும் உறுதியாக – உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.

1970 இல் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியென அத்தனை உயர் பதவிகளையும் அரசியலில் வகித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் நிறைவுக்குவரும் தருவாயில் இவரே ஜனாதிபதியாக செயற்பட்டதால் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இவருக்கான செல்வாக்கு கோலோச்சியது. மீட்பாராகவே அவரை கருதியதுடன், ஒரு சிலர் கடவுள் எனவும் போற்றி புகழ்ந்தனர். அடுத்த துட்டகைமுனு மன்னன் எனவும் மகுடம் சூடினர்.

இதனால்தான் 2015 இல் மண்கவ்வியிருந்தாலும் குறுகியக் காலப்பகுதிக்குள் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு அவரால் தலைமைத்துவம் வழங்கக்கூடியதாக இருந்தது.

தற்போதைய அரசில் சர்வபலம் பொருந்திய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச திகழ்ந்தாலும் முக்கியமான முடிவுகள் பிரதமர் மஹிந்தவின் அனுமதியின்றி எடுக்கப்படுவதில்லை. மஹிந்தவின் ஆலோசனையின்றி எவுதும் நடப்பதும் இல்லை. அதேபோல அரசுடன் முரண்படும் பங்காளிகள்கூட, மஹிந்தவுக்காகவே இன்னமும் கூட்டணிக்குள் இருக்கின்றன.

எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ச பதவி துறக்கும் முடிவை எடுக்கமாட்டார் என்பதே எமது கணிப்பு. உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் வீட்டில் இருந்தவாரே பணிகளை முன்னெடுக்கக்கூடும்.

சிலவேளை அவர் மற்றுமொருவருக்கு வாய்ப்பளிப்பதற்காக பிரதமர் பதவியை துறந்தால்கூட, அரசில் அவருக்காக அதிவிசேட பதவியொன்று உருவாக்கப்பட்டு, கௌரவ தலைவர் என்ற நிலையிலேயே வைக்கப்படுவார் என்பதே உண்மை. இதற்காக அரசமைப்புகூட மாற்றப்படலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

puthiyathalaimurai 2025 09 11 vyw9mwvj 3
சுகாதாரம்கட்டுரை

2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு 50% உயரும்: கூல் லிப் குறித்து அடையாறு புற்றுநோய் மையம் கடும் எச்சரிக்கை!

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில்...

til february 2026 being a perfect month is a rare occurence v0
கட்டுரைவரலாறு

2026 பெப்ரவரி: நாட்காட்டியில் ஒரு முழுமையான மாதம்! – 11 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ள அரிய நிகழ்வு.

தற்போது பிறந்துள்ள 2026 பெப்ரவரி மாதம், நாட்காட்டி அமைப்பில் மிகவும் அரிதான மற்றும் நேர்த்தியான ஒரு...