500x300 1723690 1716447 newproject 2022 06 21t154144860 1
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் குரூபில் இருந்து சத்தமின்றி வெளியேறலாம்! – வருகிறது புதிய அப்டேட்

Share

வாட்ஸ்அப்பில் நாளுக்குநாள் எண்ணற்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது 2 புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்கு விரைவில் வழங்க உள்ளது வாட்ஸ்அப். அதன்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தவறாக அனுப்பிவிட்டாலோ, அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களில் எழுத்துப் பிழை இருந்தாலோ அதனை அழித்துவிடும் அம்சம் ஏற்கனவே உள்ளது.

முதலில் தவறான மெசேஜ்களை 8 நிமிடங்களுக்குள் அழிக்க வேண்டும் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இதன் கால அளவு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் என நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த கால அளவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை 2 நாட்கள் 12 மணிநேரத்திற்குள் அழித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலக்கட்டத்திற்குள் ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் என நீங்கள் அனுப்பிய தரவுகள் எதுவாக இருந்தாலும் அழித்துக் கொள்ள முடியும். இதுதவிர பயனர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேறும் போது நீங்கள் வெளியேறியதற்கான மெசேஜ் குரூப் அட்மினுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் என்றும், இதன்மூலம் சத்தமின்றி வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேற முடியும். இந்த இரு அம்சங்களும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Technology

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...