download 8 1 7
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

Share

மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் வழங்க இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி செயலியின் செட்டிங்ஸ்-இல் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது.

கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படலாம். ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும்.

பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்த்தும் ஐகான் இடம்பெற்று இருக்கிறது. இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

சர்ச் பார் மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கம்பேனியன் மோட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
#Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...