Ireland WhatsApp 1 1631285724158 1631285745778
தொழில்நுட்பம்

க்ரூப் அட்மின்களுக்கு அதிக வசதி

Share

வாட்ஸ்அப் செயலியில் அட்மின்கள் நிர்வாகம் மற்றும் நேவிகேட் செய்வதை எளிமையாக்கும் க்ரூப் அப்டேட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய அப்டேட் க்ரூப்-இல் யார் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதோடு, நீங்கள் எந்த க்ரூப்களுடன் பகிர்ந்து கொள்கின்றீர்கள் என்பதை எளிமையாக்குகிறது.

கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களுடன் புதிய அப்டேட்கள் இணைகின்றன. இதில் க்ரூப் அளவு உயர்த்தியது, மெசேஞ்ச் டெலீட் செய்யும் அம்சம் உள்ளிட்டவை அடங்கும்.

புதிய அப்டேட் மூலம் அட்மின்கள் யார் க்ரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மாணிக்கலாம்.

இதோடு ஏதேனும் காண்டாக்ட் பெயரை க்ளிக் செய்தால், எந்த க்ரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்டு மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் க்ரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.

புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்பட இருக்கிறது. இது தவிர க்ரூப்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

#technology

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...