உலகளவில் இன்று மதியம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர்.
வாட்ஸ்அப் சேவைகள் இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார் அளித்தனர். டுவிட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக் டிரெண்டானது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியானது. வாட்ஸ்அப் சேவை முடங்கியதை அந்த நிறுவனம் உறுதி செய்ததுடன், பிரச்சனை சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வாட்ஸ்அப் வழக்கம்போல் செயல்பாட்டிற்கு வரும் என்றும் வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரச்சனை சரி செய்யப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் செயல்பாட்டிற்கு வந்தது.
#technology
Leave a comment