1793555 whatsapp 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

மீண்டும் சர்ச்சையில் வாட்ஸ்அப்! – 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருட்டு

Share

வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினமும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.

இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...