Elon Musk 16494179903x2 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

தலைவராக நீடிக்க வேண்டுமா? – மன்னிப்பு கேட்ட எலான்

Share

டுவிட்டர் பயன்படுத்தி வருவோரிடம், தான் டுவிட்டர் தலைவராக பொறுப்பில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார்.

சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். மீதமுள்ள 42 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என பதில் அளித்துள்ளனர்.

திங்கட்கிழமை அன்று கருத்துக் கணிப்பை துவங்கிய எலான் மஸ்க், 12 மணி நேரங்கள் லைவில் வைத்திருந்தார். இதில் 57.5 சதவீத டுவிட்டர் பயனர்கள், எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்துள்ளனர்.

1809293 elon tweet scrn 1

ஒக்டோபர் மாதத்தில் டுவிட்டர் நிறுவன தலைவராக எலான் மஸ்க் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதில் இருந்து, டுவிட்டர் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

இதோடு டுவிட்டர் நிறுவன விதிகளில் பெருமளவு மாற்றங்களை செய்தார். டுவிட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் குறித்து பயனர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

இந்த தகவலை தொடர்ந்து இது போன்ற வழிமுறையை இதுவரை அமுலுக்கு கொண்டு வராதததற்கு மன்னிப்பு கோரி இருந்தார். டுவிட்டர் தலைவர் பதவியில் நீடிப்பது குறித்த கருத்துக் கணிப்பு அடங்கிய பதிவில், எலான் மஸ்க் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

#technology #world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...