விண்வெளிக்கு இதுவரை விண்வெளி வீரர்களும்,பணக்காரர்களுமே சென்றுவந்துள்ளனர்.
முதன் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திட்மிட்டது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக 4 அமெரிக்கர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்தில் இருந்து பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்வெளி பயணம் நடைபெற்றது.
ஷிப்ட்-4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துவமனையின் மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ் ஆகியோருடன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்ஜி, சியான் ப்ராக்ட் ஆகிய 4 பேரும் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
பால்கன் ராக்கெட் அடுத்த 3 நாள்களுக்கு விண்வெளியை சுற்றும் எனவும் பயணம் முடிந்த பிறகு, அட்லாண்டிக் கடலில் தரை இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க், செவ்வாய்க் கிரகத்தில் மக்களை குடியேற்றுவது என்ற கனவுடன் உருவாக்கிய நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் நாசாவுடன் ஒப்பந்தம் வைத்து ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment