இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையே வி நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதன் காரணமாக வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து கொண்டே வருகிறது.
இதனிடையே போட்டியை எதிர்கொள்ளும் வகையில், வி நிறுவனம் தற்போது புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 181 விலையில் கிடைக்கும் புதிய பிரீபெயிட் சலுகை தினசரி பலன்களை வழங்குகிறது.
ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையுடன் கூடுதலாக இதனை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது அதிக டேட்டா பெற முடியும்.
வி நிறுவனத்தின் புதிய ரூ. 181 பிரீபெயிட் சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் மறுநாள் தான் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையில் அன்றாட டேட்டாவை விரைந்து தீர்ப்போருக்காக புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரூ. 181 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
முன்னதாக வி நிறுவனம் டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது.
இவற்றின் விலை முறையே ரூ. 289 மற்றும் ரூ. 429 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
#Technology
Leave a comment