அறிமுகமாகிறது விவோவின் 5ஜி சிமாட் போன்கள்

Vivo V21 5G 5G

Vivo V21 5G 5G

அடுத்தவாரம் விவோவின் 5ஜி சிமாட் போன்கள் சந்தைக்கு வருகின்றன.

இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் சந்தையில் கிடைக்குமென அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு கடந்த சித்திரை மாதத்தில் விவோ வி21 சிமாட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. இது அந் நிறுவனத்தின் பிரீமியம் மிட்-ரேன்ஜ் 5ஜி சிமாட்போனாக இருக்கிறது.

இப் போனில் சன்செட் டேசில், ஆர்க்டிக் வைட் மற்றும் டஸ்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இதன் ஆரம்ப விலை இந்திய ரூபாவில் ரூ. 29 ஆயிரத்து 990 ஆகும்.

அந் நிறுவனம் தற்போது வெளியிட்டிக்கும் தகவல்களில் புதிய விவோ வி21 5ஜி சிமாட் போன்கள் இம்மாதம் (ஐப்பசி) 13ம் திகதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிமாட் போன்கள் புதிய நிறத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவோ வி21 5ஜி சிமாட் போனின் 8 ஜிபி + 128 ஜிபி மொடல்களின் இந்திய விலை ரூ. 29 ஆயிரத்து 990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மொடல்களின் இந்திய விலை ரூ. 32,990 என்றும் என்றும் விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விவோ சிமாட் போன்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version