விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்

1780505 gslvmarkiii

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோ ஜெனிக் வகை எந்திரங்களில் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 கனரக ராக்கெட்டை இன்று நள்ளிரவு விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. வணிக பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட உள்ளது.

#technology

Exit mobile version