BMW i4 M50: மின்சாரத்தில் இயங்கும் BMW – நவம்பரில் விற்பனைக்கு
எரிபொருள்களின் விலை, காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சுற்றுச்சுழல் அமைப்புக்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த நெருக்கடியில் இருந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்ற கடுமையாக உழைத்து வருகின்றன.
முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உயர்தர மின்சார வாகனங்களை தயாரிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் தற்போது, ஜெர்மன் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் பிஎம்டபிள்யூ கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
தனது முதல் பிஎம்டபிள்யூ பியூல்லி எலக்ட்ரிக் சேஃப்டி காருக்கு “ஐ4 – எம்50” என்று பெயரிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் தேதி ‘ஆஸ்திரியாவின் மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ்’ விழாவில் ‘ரெட் புல் ரிங் சர்க்யூட்’ நிகழ்ச்சியில் இந்த எலெக்ரிக் காரை அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முழு பாதுகாப்பு மின்சார கார் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
Source: https://www.bmw-m.com/en/topics/magazine-article-pool/bmw-i4-m50-safety-car-.html
Leave a comment