Elon Musk 16494179903x2 1
தொழில்நுட்பம்

புதிய விதிகளை அறிவித்த எலான்

Share

டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஏஐ பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

“ஏப்ரல் 15 ஆம் திகதி முதல், வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் ஏஐ பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக்கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் வெரிஃபிகேஷன் பெற்றிருக்க வேண்டும்,” என எலான் மஸ்க் டுவிட் செய்திருக்கிறார்.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண சமூக வலைதள அக்கவுண்ட்கள் தான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.

முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருந்தது. உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது.

பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் வெரிஃபைடு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

#technology

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...