டுவிட்டரில் கணக்கு பாதுகாப்புக்கும் கட்டணம் – எலான் மஸ்க் அதிரடி!

Elon Musk 16494179903x2 1

எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் பணிநீக்கத்தில் துவங்கி, அம்சங்களில் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு அதிரடிகள் டுவிட்டரில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், தற்போது கட்டணம் செலுத்துவோர் மட்டுமே டுவிட்டர் தளத்தில் டூ-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் வசதியை கொண்டு தங்களின் அக்கவுண்ட்களை பாதுகாக்க முடியும்.

“மார்ச் 20 ஆம் திகதிக்கு பின் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர் மட்டுமே டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையில் குறுந்தகவல்களை பெற முடியும்,” என அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

டு-ஃபேக்டர் முறையை தேர்வு செய்யும் போது, பயனர்கள் வழக்கமான கடவுச்சொல் மட்டுமின்றி கூடுதலாக குறுந்தகவல், ஆதெண்டிகேஷன் ஆப் அல்லது செக்யுரிட்டி கீ என மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த நிலையில், டுவிட்டரில் டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை சிலர் தவறாக கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என டுவிட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த பயனர் கேள்விக்கு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்திலேயே பதில் அளித்து இருக்கிறார்.

எலான் மஸ்க் அளித்த பதிலில், “டெலிகாம் நிறுவனங்கள் பாட் அக்கவுண்ட்களை கொண்டு டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் எஸ்எம்எஸ்-ஐ அனுப்புகின்றனர். இதன் காரணமாக நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மோசடி குறுந்தகவல்களால் 60 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.

#world #technology

Exit mobile version