1739103 earth
தொழில்நுட்பம்

பூமியின் சுழற்சி வேகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம்!

Share

பூமியின் சுழற்சி வேகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம்!

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது.

இந்நிலையில் சமீப காலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1960-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19-ந் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. அன்றைய தினம் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி வினாடிகள் குறைவாக இருந்தது.

அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தை காட்டிலும் வேகமாக சுற்றி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகும் பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.

இதன் மூலம் மிக குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு சற்று அதிகம் ஆகும். என்றாலும் 1.59 மில்லி வினாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் தகவல் வரும் நாட்களில் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும், அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் இன்ட்ரஸ்டிங் என்ஜினீயரிங் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது? என்பதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. பூமியின் மையப்பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் இதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமியின் சுழலும் வேகம் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும். அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் விகிதத்துக்கும், கடிகாரங்களுக்கும் பொருந்தாமல் போகலாம்.

இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர்கள், தொலை தொடர்பு அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதையும் படியுங்கள்: ராணுவப் பயிற்சிக்காக ஓமன் நாட்டு வீரர்கள் இந்தியா வருகை ஏனெனில் கடிகாரம் 23:59:59-ல் இருந்து 23:59:60 வந்த பின்னர் தான் 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். பூமி வேகமாக சுற்றுவதால் லீப் வினாடிகள் ஏற்படும் பட்சத்தில் அது தொலை தொடர்பு புரோகிராம்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

இதனை சரிகட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம் (யு.டி.சி) ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை மாற்றி அமைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது தான் தொலை தொடர்பு சாதனங்களிலும், உலக அளவிலும் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...