ezgif 3 61433297d5
உலகம்சினிமாசெய்திகள்தொழில்நுட்பம்பொழுதுபோக்கு

எலானிடம் கூகுள்பே நம்பரை கேட்டு கலாய்த்த பிரபல நடிகர்

Share

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நிலையில் அதை கேலி செய்யும் வகையில் தமிழ் நடிகர் ஒருவர் உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அதற்கு பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ உள்பட பல முக்கிய நிர்வாகிகளை அவர் நீக்கினார்.

ezgif 3 674d4b0ebf

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என நேற்று இரவு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 8 டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 640 ரூபா வரை ஆகும் என்பதும் இந்தியாவில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் மாதம் 640 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த தமிழ் நடிகர் சிபிராஜ் உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். சிபிராஜூம் டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் சிபிராஜ் பதிவு செய்துள்ள இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 15
சினிமா

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா...

15 16
சினிமா

44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த...

12 16
சினிமா

விஜய், அஜித்துக்கு நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...

13 15
சினிமா

ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா.. ரொமான்ஸ் வேற லெவலில் இருக்குமே

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள்...