Messenger Lite
தொழில்நுட்பம்

நிறுத்தப்படுமா Messenger Lite ? Meta நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!!

Share

நிறுத்தப்படுமா Messenger Lite ? Meta நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!!

பேஸ்புக் நிறுவனத்தின் தாய்நிறுவனமான மேட்டா நிறுவனம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள். மேட்டா நிறுவனம் வட்சப், இன்ஸ்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை நிர்வகித்து வருகின்றது. இன்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த மாதம் அளவில் Messenger lite செயலியினை நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள். வெறும் 25MB உடன் வெளிவந்த Messenger Lite சிறிய நினைவகத்தைக்கொண்ட அதாவது 8GB நினைவகத்தை கொண்ட தொலைபேசிகளின் நினைவகத்தை நிரப்பாமல் chats, calls என்பவற்றை பேஸ்புக் உடன் இணைந்து பயன்படுத்துவதற்கு உதவியாக இருந்தது.

Messenger Lite ஆனது 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பயனர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுக்கொண்டது. அறிமுகப்படுத்திய ஒருவருட காலத்திற்குள் 50M Google Play store தரவிறக்கங்களை பெற்றுக்கொண்டது.

இன்றைய நாட்களில் தொலைபேசிகள் அதிக திறன் மற்றும் அதிக நினைவகத்தை கொண்டுள்ளதால் மட்டுப்படுத்திய அம்சங்களை கொண்ட Messenger Lite தேவையற்ற ஒன்றாக மாறிவருவதால் எதிர்வரும் September 18 திகதி சேவையினை முற்றாக நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

மேட்டா நிறுவனமானது Messenger Lite சேவையினை நிறுத்துவதற்கு முன்னர் Messenger சேவைக்கு மாறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Messenger Lite இன் சேவைகள் நிறுத்தப்பட்டாலும் சிறிய மற்றும் வேகமான பேஸ்புக் செயலியான Facebook Lite தொடர்ந்து சேவையில் இருக்கும் என்று அறிவித்து இருக்கின்றார்கள்.

Apple iOS இயங்குதளத்தில் 2020 ஆண்டு Messenger Lite சேவையினை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...