கட்டுரை
AI தொழில்நுட்பத்தில் ஸ்டிக்கர்கள்: வாட்ஸ்அப் புதிய அம்சம்
AI தொழில்நுட்பத்தில் ஸ்டிக்கர்கள்: வாட்ஸ்அப் புதிய அம்சம்
வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அம்சம் தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்களை மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஏஐ மூலம் ஸ்டிக்கர் ஜெனரேட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த அம்சத்தை கொண்டுள்ள வாட்ஸ்அப் வெர்ஷனை பீட்டா டெஸ்டர்கள் தங்கள் திறன்பேசிகளில் நிறுவி, சோதனை செய்து பார்த்துள்ளனர். பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கீபோர்டில் ஸ்டிக்கர் டேபில் ‘கிரியேட்’ எனும் டேபை கிளிக் செய்து, தங்களுக்கு என்ன மாதிரியான ஸ்டிக்கர் வேண்டுமென விவரித்து, அதை உருவாக்க முடியுமாம்.
முற்றிலும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஏஐ ஸ்டிக்கர் உருவாக்கப்படுகிறதாம். இது பயனர்களின் உரையாடலை மேலும் சுவாரஸ்யமான வகையில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனித்துவ மற்றும் உரையாடலுக்கு ஏற்ப இந்த ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். இதன் வாட்ஸ்அப் சார்ந்த மேம்பாடுகளை கண்காணித்து வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login