1846028 elon musk wirth security
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

எலான் மஸ்க்-ஐ பின்தொடரும் பாதுகாவலர்கள்?

Share

உலகளவில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார். இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாவலர் எலான் மஸ்க் எங்கு சென்றாலும், அவருடன் செல்கின்றனர். “எங்கு சென்றாலும்” என்பதில் கழிவறையும் அடங்கும்.

இதுகுறித்து டுவிட்டரில் பணியாற்றி வரும் பொறியாளர் ஒருவர் கூறும் போது, எலான் மஸ்க்-ஐ சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உள்ளனர். டுவிட்டர் அலுவலகத்தில் அவரை சுற்றி எப்போதும் குறைந்தபட்சம் இரண்டு காவலர்கள் உள்ளனர். “அலுவலகத்தில் அவர் எங்கு சென்றாலும், அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் உடன் செல்கின்றனர்.

பாதுகாவலர்கள் பிரமாண்டமாகவும், ஹாலிவுட் படங்களில் வருவதை போன்று காட்சியளிக்கின்றனர். அவர் கழிவறைக்கு சென்றாலும் இவர்கள் பின்தொடர்கின்றனர்” என தெரிவித்துள்ளார். சான் பிரான்டிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் மஸ்க்-ஐ சுற்றி பாதுகாவலர்கள் இருப்பதை பார்க்கும் போது, அவருக்கு நிறுவன ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.

டுவிட்டர் அலுவலகத்தை சுற்றிலும் ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து உயிரை பணயம் வைக்க எலான் மஸ்க் விரும்பவில்லை என்பதை அவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன. பெரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது புதிதான காரியம் இல்லை,மேலும் அவர்கள் எப்போதும் அவர்களுடனேயே செல்வர். ஆனால், எலான் மஸ்க்-க்கு பாதுகாப்பு ஒருமடங்கு அதிகமாகவே வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...