ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலக கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அதன் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையடைந்து, எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் அந்நிறுவனம் வந்தது.
முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதுதவிர ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்று கொள்ளும் முறையை அறிவித்தார். அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் போலி செய்திகள் எளிமையாக பரவும் என்ற குரல்களும் எழுந்தன.
இந்த நிலையில் ட்வீட்டரை லாப நோக்கில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எலன் மஸ்க் அதன் ஊழியர்களை கூடுதல் நேரம் பணி செய்யுமாறு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ட்வீட்டர் ஊழியர்கள் தங்கள் பதவியை பெரியளவில் ராஜினாமா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில்தான் ட்விட்டர் அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அதன் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ட்விட்டர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த செய்தியில் நிறுவனத்தின் தகவல்களை பத்திரிகைகள் மற்றும் பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ட்விட்டரை எலான் மஸ்க் மூட போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக #riptwitter, #GoodByeTwitter போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இதற்கிடையே எலான் மாஸ்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் Rip Twitter என்பதை குறிக்கும் வகையில் படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
#technology #twitter
Leave a comment