தொழில்நுட்பம்
ஷெட்யுல் வசதி – அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் சேவையில் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை பயனர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களாகவே பதிவுகளை வெளியிடும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பலர் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தி பதிவுகளை ஷெட்யுல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புரோபஷனல் அக்கவுண்ட்ஸ்-களுக்கு மட்டும் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய அம்சம் ஒருவழியாக வழங்கப்பட்டு இருக்கிறது.
மெட்டா, ட்விட்டர், டிக்டாக் மற்றும் யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் தானாக பதிவு செய்ய வைக்கும் ஷெட்யுல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பதிவுகளை ஷெட்யுல் செய்வதோடு, மெட்டா கிரியேட்டர் ஸ்டூடியோ மூலமாகவும் ஷெட்யுல் செய்ய முடியும்.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று போஸ்ட் ஷெட்யுல் அம்சம் ப்ரோபஷனல் பயனர்கள், அதாவது கிரியேட்டர் மற்றும் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் கொண்டு பயனர்கள், போட்டோ, ரீல்ஸ் மற்றும் கரௌசல் போஸ்ட்களை அதிகபட்சம் 75 நாட்களுக்கு முன்பே ஷெட்யுல் செய்யலாம்.
பதிவுகளை ஷெட்யுல் செய்ய, வழக்கம் போல் பதிவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் போஸ்ட் செய்யும் முன் “அட்வான்ஸ்டு செட்டிங்ஸ்” ஆப்ஷனில் “ஷெட்யுல் திஸ் போஸ்ட்” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி எந்த தேதி மற்றும் நேரத்தில் குறிப்பிட்ட போஸ்ட் வெளியாக வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
#technology
You must be logged in to post a comment Login