தொழில்நுட்பம்
அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!


அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் IFA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது .
அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் இன்பனைட் பிளாக் மற்றும் ரோஸ்பட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு ஓஉள்ளது.
இதன் முன்பதிவு அமேசான் மற்றும் அமேஸ்பிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விற்பனை செப்டம்பர் 22 ஆம் திகதி துவங்குகிறது.
அம்சங்கள்
- அமேஸ்பிட் GTS 4
- 1.75 இன்ச் 390×450 பிக்சல் AMOLED ஸ்கிரீன்
- செப் ஒஎஸ் 2.0
- 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- பயோ டிராக்கர் 4.0 பயோமெட்ரிக் சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ப்ளூடூத் 5.0 LE, வைபை, டூயல் பேண்ட் ஜிபிஎஸ்
- 2.3 ஜிபி பில்ட் இன் மெமரி
- மைக்ரோபோன்
- ஆப்லைன் வாய்ஸ் அசிஸ்டண்ட்
- ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங்
- 300 எம்ஏஹெச் பேட்டரி