தொழில்நுட்பம்
ஐபோன் 14 ப்ரோ கேமரா! பயனர்கள் அதிருப்தி


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல் விற்பனை சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 124 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்கியவர்கள் தங்களது யூனிட்களில் கேமரா ஷேக் ஆவதாகவும், விசித்திரமான சத்தம் கேட்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா பிரச்சினை இருப்பதாக பலர் தங்களின் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இயக்க முயன்றவர்களுக்கு பெரும்பாலும இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் கேமரா இயக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது.
எனினும், ஐபோனில் அதிர்வுகள் மற்றும் கிரைண்டிங் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.