அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மொடல்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிப்பாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாட்டினை அந்நிறுவனமும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சிப்செட் குறைபாடு காரணமாக அப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதமளவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட ஐபோன் 13 மொடல்களின் விநியோகம், இம்மாத இறுதியில்தான் விற்பனை செய்யப்படும் நிலையில் உள்ளதுடன், பெரும்பாலான அப்பிள் ஸ்ரோர்களில் ஐபோன் 13 சீரிஸ் மொடல்கள் இதுவரை பட்டியலிடப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 Comments