செய்திகள்உலகம்கட்டுரைவிஞ்ஞானம்

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்” எனப் பெயரிட்டது?

corona 2
Share

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது.

திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும் (12th letter of the alphabet) “மு”(mu) என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு தோன்றிய ஆபிரிக்கத் திரிபுக்கு வரிசைப்படி 13 ஆவது எழுத்தைக் குறிக்கின்ற “நு” (“Nu”) என்ற பெயரோ அல்லது 14 ஆவது கிரேக்க இலக்கத்தைக் குறிக்கின்ற ஜி(“Xi”) என்ற பெயரோதான் சூட்டப்பட்டிருக்க வேண்டும்.

சில குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து விட்டு 15 ஆவது இலக்கத்தைக் குறிக்கின்ற “ஒமெக்ரோன்” என்ற பெயரைச் சூட்ட முடிவுசெய்யப்பட்டதாக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

“நு” (Nu) என்ற பெயர் ஆங்கில வார்த்தையான “நியூ” (New ) என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பு ஒலியைக் கொண்டிருப்பதால் குழப்பத்தை உருவாக்கும் எனக் கருதி அது தவிர்க்கப்பட்டது. “ஜி” (Xi) என்பது உலக அளவில் பரவலாகப்-பிரபலமாகப் பயன்பாட்டில் உள்ள குடும்பப் பெயர் (family name). அத்துடன் சீன அதிபரது பெயரையும் (Xi Jinping) அது குறிக்கிறது. எனவே தொற்று நோய்க்குப் பெயரிடுவதில் இனம், மொழி, சமூகம், நாடுகள் சார்ந்த குழப்பங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற நோக்குடன் பெயர் தெரிவுகள்
செய்யப்படுகின்றன என்று ஐ. நா. அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

புதிய திரிபுகள் முதலில் கண்டறியப்படுகின்ற நாடுகளின் பெயர்களில் அழைக்கப்படுவதால் ஏற்படுகின்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே அவற்றுக்குத் தனித் தனியே பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து வைரஸ் அல்லது ஆங்கில வைரஸ் என அழைக்கப்பட்ட திரிபுக்கு “அல்பா திரிபு” (Alpha variant) என்று முதலில் பெயரிடப்பட்டது. அதன் பிறகு கொவிட் வைரஸின் பல திரிபுகளுக்கு அவ்வாறு கிரேக்க இலக்கப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றில் “கவலைக்குரியது” என்று சுகாதார நிறுவனத்தால் தர நிலைப்படுத்தப்பட்டவற்றில் ஒமெக்ரோன் ஐந்தாவது திரிபு ஆகும்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....