திருகோணமலை எண்ணை தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் உதய கம்மன்பில இன்று 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது அரச பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இந்தியன் நிறுவனம் மற்றும் டிரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகியவற்றுடன் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதன் இணைப்புகளுடன் சபையில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
அதேபோல் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட”எண்ணை தாங்கிகள் மீண்டும் எமது நாட்டுக்கு” என்ற அறிக்கையையும் சபையில் சம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews