ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) தீபாவளி வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் விண்வெளி ஆய்வு தொடர்பான பல்வேறு முயற்சிகளை வெற்றிகொண்டுள்ள நாசா தனது தீபாவளி வாழ்த்தையும் வித்தியாசமான அரிய புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
பால்வீதியின் பரப்பில் நட்சத்திரங்கள் கூட்டமாக இருக்கும் அரிய புகைப்படத்தை வெளியிட்டு தனக்கே உரித்தான பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது நாசா.
நாசாவின் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து தற்போது வைரலாகி வருகிறது.
#Nasa
Credits: @EuropeanSpaceAgency/Hubble and NASA, R. Cohen
Leave a comment