மதுப் பாவனை – 7.40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் !!!!
மது அருந்தும் பழக்கத்தால் உலகளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை ‘லான்செட் ஆங்க்காலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
புற்றுநோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களில் 76.7 சதவீதமானோர் ஆண்கள் என்று தெரிவித்துள்ள குறித்த அறிக்கை, மதுப்பாவனையாளர்களின் கல்லீரல், மலக்குடல் மற்றும் மூச்சுக்குழாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Leave a comment