அமெரிக்காவின் சுதந்திரம் – தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்
ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா பஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது.
2021 ஆம் ஆண்டுக்கான ‘மெட் காலா’ அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
“அமெரிக்காவின் சுதந்திரம்“ என்ற கருப்பொருளைக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பிரபல தொழிலதிபர் மேகா கிருஷ்ணனின் மனைவி சுதா ரெட்டி முதல்முறையாகக் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 250 கிலோ எடைகொண்ட ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடை முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இதேவேளை, பிரபல மாடலான கிம் காதஷியன், கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடையை அணிந்து கலந்துகொண்டார். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்காவின் இளம் எம்.பியான அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டஸ் பேஷன் நிகழ்ச்சியை அரசியல் பேசும் இடமாக மாற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பங்குபற்றும் இந்த நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியத்துக்கு நிதி திரட்டுவதற்காக 1948 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிகழ்வாகும்.
வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்த நிகழ்வு, கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில் இவ்வாண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment